BREAKING NEWS

மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.

மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.

மின்னல் வேகத்தில் வந்த லாரி... சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்: அதிகாலையில் பறிபோன 4 உயிர்கள்

சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, சலவைக் கல் ஏற்றி வந்த லாரி படுவேகமாக மோதியதில் மூன்று வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் கூத்தன் கோயில் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கியிருக்கிறார். அப்போது சேலத்திலிருந்து டைல்ஸ் மற்றும் கிரானைட் ஏற்றிக் கொண்டு அவ்வழியாக வேகமாக வந்த லாரி வந்த வேகத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கி சேதம் அடைந்தது. இதில் லாரியில் முன்னால் அமர்ந்து வந்த சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (38) அவரது மனைவியின் தங்கை கற்பகவள்ளி (27), செல்வகுமாரின் மூன்று வயது மகன் மிதுன் மற்றும் லாரியின் ஓட்டுநர் நகுலேஸ்வரன்( 25 ) ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். நான்கு பேரின் சடலங்களையும் அண்ணாமலை நகர் போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த லாரியில் பயணித்த சிவகுமார் (34) கருப்புசாமி (34,) பெருமாள் ( 42,) ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அண்ணாமலை நகர் போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )