BREAKING NEWS

மின் கட்டணத்தை மீண்டும் பழைய முறையில் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மின் கட்டணத்தை மீண்டும் பழைய முறையில் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் குணா மாவட்ட விவசாயி அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தினர்.

 

 

மனுவில் தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவடையும் சூழ்நிலையில் பால்விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக 70% மக்கள் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில் மாநில அரசு மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை ஒரு போன்றவை மக்களை மேலும் கஷ்டத்திலும் வறுமையிலும் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட மின் கட்டண முறையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )