மின் விநியோக அலுவலகத்தில் பணியின்போது கோவில் பணியாளரை மின்சாரம் தாக்கியதில் உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம்.
மின் விநியோக அலுவலகத்தில் பணியின்போது கோவில் பணியாளரை மின்சாரம் தாக்கியதில் உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மின் விநியோக அலுவலகத்தில் பணியின்போது கோவில் பணியாளரை மின்சாரம் தாக்கியதில் உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மின் விநியோகம் செய்வதற்காக தனியாக மின் விநியோக அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில் இன்று காலை கோவில் மின் பணியாளர் முனியாண்டி(39) மின் விநியோக அலுவலகத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மரில் ஏறி பராமரிப்பு பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியதால் ட்ரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கிய எரியப்பட்டுள்ளார்.

இதில் அதிகளவில் மின்சாரம் பாய்ந்ததால் அவர் அணிந்திருந்த சட்டை தீப்பற்றி எரிந்தது. இதில் அவருக்கு உடலில் வயிறு மற்றும் தோள்பட்டை பகுதியில் தீ காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது அலறல் சத்தம் கேட்டு கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில் மின்வாரியத்துயினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் மின் விநியாயோக அலுவலத்தில் மின்சாரம் தாக்கி உடல் தீப்பற்றிய சம்பவம் கோவில் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
