BREAKING NEWS

மீண்டும் குறையத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

மீண்டும் குறையத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

மீண்டும் ஏற்றத்தில் தங்கம்; முதலீடு செய்ய, நகை வாங்க இது சரியான நேரமா? |  gold prices set to climb higher as pandemic again impacts global economy

சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சியால் கடும்பொருளாதார சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை அதிகரித்தது. மே 3ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாடப்பட்டது. அட்சயதிரிதியை முன்னிட்டு அன்றைய மற்றும் அடுத்த நாள் என  2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது.

இதனால், அட்சயதிரிதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மே 18ம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்பனை செய்யப்பட்டது. மே19ம் தேதி தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.16 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரம் ரூ.38,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. மே  20ம் தேதியும் கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மே 21ம் தேதி கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4817க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,536க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,696க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.784 அளவுக்கு அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.4,823க்கும், சவரன்  ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.38,584க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் சற்றே குறைந்து கிராம் வெள்ளி ரூ.66.80, ஒரு கிலோ வெள்ளி 66800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )