BREAKING NEWS

மீனாட்சிபுரத்தில் அருள்மிகு செல்லாயி அம்மன் புரட்டாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மீனாட்சிபுரத்தில் அருள்மிகு செல்லாயி அம்மன் புரட்டாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு திருவிழாவும் நடைபெறாமல் இருந்த நிலையில்,

 

 

இந்த வருடம் தேனி அருகே உள்ள போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் துரைராஜபுரம் பொட்டல் களம் தோப்புப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாயி அம்மன் இரண்டு நாள் புரட்டாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 

இந்த கோவில் பாண்டியர் காலத்தில் இருந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் புரட்டாசி மாதம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து செல்லாயி அம்மனுக்கு விழா கும்பிடுவது வழக்கம்அதன்படி தொற்று தொட்டு இந்த வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

முதல் நாள் கோவில் திருவிழாவில் இன்று துரைராஜபுரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக பறவை காவடி எடுத்தும்,   அழகு குத்தியும் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லாயி அம்மன் கோவில் வரை சென்று செல்லாயி அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 

இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு செல்லாயி அம்மனை தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )