BREAKING NEWS

மீனாட்சிபுரத்தில் நாடக மேடை திறப்பு விழா

மீனாட்சிபுரத்தில் நாடக மேடை திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நீண்ட காலமாக நாடகமேடை கட்டித் தரவேண்டும் என்று அரசாங்கத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனை கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சென்ற திமுக, அதிமுக வேட்பாளர்களை முற்றுகையிட்டு நாடக மேடை கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிமுக, திமுக மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் நிச்சயமாக நாடக மேடை கட்டி கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்து சென்றனர். அதன்படி நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக எஸ். தேன்மொழி சேகர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது சட்டமன்ற நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சத்தை ஒதுக்கி மீனாட்சிபுரம் கிராமத்தில் நாடகமேடை கட்ட நிதி ஒதுக்கினார்.

அதன்படி நாடகமேடை கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து திறப்பு விழா நேற்று நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், பேரூராட்சித் தலைவர் சேகர், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, தேமுதிக வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, அரசு ஒப்பந்ததாரர் முனியப்பன், அதிமுக மாவட்ட பொறுப்பாளர் ஜேசுராஜ், மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )