BREAKING NEWS

மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

நாட்டுப்படகு மீனவர்கள் எனக்கு எதிராக செயல்பட தூண்டிவிட்டு குளிர் காயலாம் என சிலர் நினைத்தார்கள் அது நடக்காது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு..

மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செந்தூர் அமலிநகரில் நடந்தது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ரூ.21 கோடியே 5 லட்சத்தில் 45 ஆயிரத்து 550 மதிப்பில் தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ.4,500 வீதம் 23 ஆயிரத்து 62 மீனவ பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பெரியதாழை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்படுத்தும் எந்திரத்தை 40% மானியத்தில் 35 பேருக்கு வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது..
தமிழகத்தில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மீனவ பகுதிகளில் சிறுசிறு குழப்பங்களை ஏற்படுத்த சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

விசைப்படகு மீனவர்களும், நாட்டுப்படகு மீனவர்களும் பிரிவினையை மறந்து அண்ணன் தம்பி போல் பேசி ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என நான் தூத்துக்குடியில் பேசினேன். அதை ஒரு பெரிய செய்தியாக எடுத்துக்கொண்டு நாட்டுப்படகு மீனவர்கள் எல்லாம் எனக்கு எதிராக செயல்பட வேண்டும் என தூண்டிவிட்டு குளிர் காயலாம் என நினைத்தார்கள், ஆனால் நாட்டுப்படகு மீனவர்களை திமுக என்றும் கைவிடாது என நான் உறுதியாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என பேசினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )