முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன் உடுக்கு அடித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.

தமிழகத்தில் கொரனோ தொற்று ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூரில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தஞ்சையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பள்ளி மாணவன் உடுக்கை அடித்து கொரனோ தடுப்பூசி போடுவோம், தனித்திருப்போம் விலகி இருப்போம் கொரனோவை தடுப்போம், முகக் கவசம் கட்டாயம் அணிவோம், உள்ளிட்ட வாசகங்களை கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார் மேலும் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு தஞ்சை நகர காவல் டிஎஸ்பி ராஜ்குமார் இனிப்புகள் வழங்கியும் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க்கையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
