முசிறி அருகே மின் கம்பத்தில் ஏறிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்
முசிறி அருகே மின் கம்பத்தில் ஏறிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்.
முசிறி அருகே மின் கம்பத்தில் ஏறிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (46) கூலி தொழிலாளி.இவர் நேற்று அழகரை ஊராட்சி உட்பட்ட
கோடியாம் பாளையம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பீயூஸ் போனதை சரி செய்வதற்காக மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது வீரப்பனை மின்சாரம் தாக்கியது. இதில் கம்பத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அய்யம்பாளையம் மின்வாரிய அலுவலர் சோமசுந்தரம் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மின்சாரத்தை நிறுத்தி வீரப்பன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின்வாரிய அலுவலக பணியாளர் அல்லாத வீரப்பன் எதற்காக மின்கம்பத்தில் ஏறினார். அதற்கான காரணம் என்ன .அவர் விபத்தில் உயிரிழந்தது எவ்வாறு என்பது குறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.