முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கம் நிகழ்ச்சி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா, நலத்திட்டங்கள் வழங்கம் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள பார்வை குறைபாடுடையோர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி, சிக்கன், முட்டை, இனிப்புகள் உள்ளிட்ட அசைவ உணவு இன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், தஞ்சை மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், கனகவல்லி பாலாஜி, மாவட்ட பொருளாளர் L.G.அண்ணா, பகுதி கழக செயலாளர் மேத்தா,
பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மண்டல குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கலையரசன், கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்… நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியும், கைதட்டியும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.