முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார் தஞ்சையில் அமைச்சர் சி.வி. கணேசன் பேட்டி.

தஞ்சையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் கூடுதலாக 10 ஆயிரம் பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கையால் பதிவு செய்துள்ளனர். பெண் ஆட்டோ டிரைவர்கள் 500 பேருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஆட்டோ வாங்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
