BREAKING NEWS

முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக் பதவியேற்பு

முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக் பதவியேற்பு

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார். அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு.

இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாட்டம் - விமானப்படை அணிவகுப்பு - Ippodhu
படையில் சேர்ந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஓம் சிங் ஆவார். ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேருவதற்கு முன்னர் கேப்டன் அபிலாஷா, தொழில் ரீதியில் நிறைய ராணுவ படிப்புகளை படித்துள்ளார். தந்தை வழியில் மகளும் நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )