முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்திய குடிமகன் / குடிமக்களாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகின்றேன்.” என்று உறுதிமொழி ஏற்றனர்.
