BREAKING NEWS

முதியோர் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு: புதிய மகளிர் கொள்கை உருவாக்க நடவடிக்கை.

முதியோர் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு: புதிய மகளிர் கொள்கை உருவாக்க நடவடிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இயல் கலந்து கொள்ள வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தஞ்சை மாவட்டம் பாளையபட்டியில் குழந்தைகள் மையத்தை திறந்து வைத்தார். இதையடுத்து மருங்குளத்தில் உள்ள மதர் தெரசா முதியோர் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆய்வு செய்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் நலனுக்கு என்று புதிய கொள்கை உருவாக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறோம். முதியோர் பாதுகாப்புக்கு என்று தனிப்பிரிவு உருவாக்கப்படும். பணிபுரியும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்ய 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதனை விசாரிக்க தனி குழு அமைக்கப்படும். விசாரித்து கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.


18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )