மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு தி.மு.க மருத்துவர் அணி சார்பில் பரிசு.

தஞ்சாவூர் நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு
தஞ்சை மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் ஆடைகள், பனிக்குல்லாய், பவுடர், சோப்பு, நாப்கின் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்,

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மேயர் ராமநாதன், தி.மு.க மருத்துவர் அணியின் அமைப்பாளரும் துணைமேயருமான டாக்டர். அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் மகிழ்ச்சியோடு வழங்கி முதல்வர் மு.க. ஸ்பாலினின் பிறந்தநாளை தஞ்சை மாவட்டத்தில் முதல் விழாவாக கொண்டாடினர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சை அரசு மருத்துவமனைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகமுதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்
