BREAKING NEWS

மூக ஆர்வலர் உவரி ஆல்ட்ரினுக்கு டாக்டர் பட்டம். பெங்களூர் பல்கலைக்கழகம் வழங்கியது.

மூக ஆர்வலர் உவரி ஆல்ட்ரினுக்கு டாக்டர் பட்டம். பெங்களூர் பல்கலைக்கழகம் வழங்கியது.

சமூக ஆர்வலர் உவரி ஆல்ட்ரினுக்கு பெங்களூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. பெங்களூர் இந்தியன் எம்பெயர் யுனிவர்சிட்டி சார்பில் பட்டமளிப்பு விழா நடந்தது. சித்தூர் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிதாஸ் தலைமைவகித்தார். நிகழ்ச்சி யில் நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆல்டரினின் பொது சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

 

இந்தியன் எம்பயர் யுனிவர்சிட்டி தலைவர் டாக்டர் பால் சி.எபனேசர் பட்டத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சி யில் யுனிவர்சிட்டி டெவலப்மென்ட் கவுன்சில் துணைத்தலைவர் கே.பிரபாகர், ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டம். பெற்ற உவரி ஆல்ட்ரின் தற்சமயம் கலைஞர் முத்தமிழ் பேரவை மாநில துணைத்தலைவராகவும் ,தமிழ் நாடு மீனவர் பேரவை மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படவிளக்கம்.
உவரி யைச்சேர்ந்த சமூக ஆர்வலரும் தமிழக கலைஞர் முத்தமிழ் பேரவை துணைத்தலைவருமான ஆல்ட்ரினுக்கு பெங்களூரில் நடந்த விழாவில் பொதுசேவை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )