BREAKING NEWS

மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்.

மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்.

குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிமங்கலம் ஒன்றியத்தில் உட்பட்ட கிராமங்களில் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தொட்டம்பாளையம் இரும்புநகரம் குடிமங்கலம் பூக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீரூந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கில்தொழுவு ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கடந்த சில தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வந்தனர் இந்த நிலையில் குடிநீர் கேட்டு மூங்கில்தொழுவு பிரிவில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த குடிமங்கலம் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாதிக் பாஷா ஆகியோர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதன் காரணமாகவே குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் தெரிவித்தனர்.
இலுப்ப நகரப் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து விரைவாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிய தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் மூங்கில்தொழுவு பிரிவில் சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )