மூல நட்சத்திரத்தை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதங்களாக வெண் பொங்கல், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களுடன் செந்தூரம் வழங்கப்பட்டது.
இந்த பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலின் ஆஸ்தான பட்டாச்சாரியார் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில பக்தர்கள் வெற்றிலை மாலையை கொண்டு வந்து மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு செலுத்தி தங்களது நேர்த்திக் கடனை தீர்த்துக் கொண்டனர்.