BREAKING NEWS

மெகா வேலை வாய்ப்பு முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.

மெகா வேலை வாய்ப்பு முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி: அம்மா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி டிவைன் சிட்டி ஆகியவை சார்பில் இளைஞர்கள் பயன் பெரும் வகையில் மெகா வேலை வாய்ப்பு முகாம் உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில அ.தி.மு.க. செயலாளர் நடராசன் ,கிழக்கு மாநில ஜெ. பேரவை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர், கிழக்கு மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன்,

புதுவை மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், புதுவை நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில அண்ணா தொழிற்ச்சங்க செயலாளர் பாப்புசாமி, கிழக்கு மாநில செயலாளர் ஞானவேல், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )