மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் பார்க்கும் வசதியை கும்பகோணம் சீமாட்டி ஜவுளி நிறுவனம் தொடங்கி வைத்தனர்.

மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் பார்க்கும் வசதியை கும்பகோணம் சீமாட்டி ஜவுளி நிறுவனம் தொடங்கி வைத்தனர். விழாவில் துணை மேயர் கலந்து கொண்டார்.
கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனம் சார்பில் டெக் நேஷன் டிஜிட்டல் கியோஸ்க் என்ற தொழில் நுட்பத்தை வாடிக்கையாளருக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகமது ஜியாவுத்தீன் தலைமை தாங்கினார் .
கும்பகோணம் துணை மேயர் சு.ப.தமிழழகன் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி, சிட்டி யூனியன் வங்கி அதிகாரி பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மஹாராஜா குழுமங்களின் தலைவர் முஹம்மது ரபி புதிய தொழில் நுட்ப பிரிவை தொடங்கி வைத்து வாடிக்கையாளருக்கு அர்ப்பணித்தார்.
அப்போது விழாவில் பேசியதாவது;-
முதல் முறையாக பல்வேறு ஆடை ரகங்ககளை இந்த டெக் நேஷன் டிஜிட்டல் கியோஸ்க் மூலமாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வது மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஆடை புகைப்படங்களை அனுப்பலாம் மேலும் மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் காணலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சீமாட்டி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பஷீர் அகமது,தொழில் அதிபர் ஆசிப் அலி,வர்த்தக பிரமுகர்கள்,ரோட்டரி மற்றும் கிஸ்வா நிர்வாகிகள் திரளான வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் மேலாளர் ஆசாத் நன்றி கூறினார்.
Japarali