மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்தும், உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது காவிரி மேலாண்மை வாரியம் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டதைக்
கண்டித்தும் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி – வைகை-கிருதுமால் – குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குகூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் திரு.பா.அய்யனார் தலைமை தாங்கினார், திரு.தவம் மாவட்டப்பொருளாளர் , திரு.VA. அக்னிச்சாமி மாவட்டத்துணைச் செயலாளர், திரு.A.K பாலகிருஷ்ணன் – மாவட்டக்குழு,
திரு.மு.ராஜிவ்காந்தி – மாவட்டக்குழு. திரு.க.கருணாநிதி – காளையார்கோவில் ஒன்றியச்செயலாளர், திரு.மு.மாயாண்டிச்சாமி – மானாமதுரை ஒன்றியச்செயலாளர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு.முகவை.மு. மலைச்சாமி – இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்,
திரு.இராம.முருகன்
மாநிலச் செயலாளர்,
திரு.எம்.அர்ச்சுணன் – மாநிலப் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை ஆர்பாட்டத்தை தெரிவித்தனர்.
