மே 20 வரை ஆசியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
மே 20 வரை ஆசியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின், தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.
மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வர தேவை இல்லை என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் நாளை முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில், மே 20-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
