மே 23 முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் தொடக்கம்!!
மே 23 முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் தொடக்கம்!!
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்களின் தேவைகளை பொறுத்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனாவிற்கு முந்தைய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை- மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மே 23 முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஏற்கனவே 2 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது 3வதாக கோவை-மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(06816) மே 23 முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இதேபோல மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(06813) மே 23 முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு, காலை 11.40 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை- மேட்டுப்பாளையம் இடையே எந்த ரயில் நிலையத்தில் ஏறி இறங்கினாலும், இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே இந்த வழித்தடத்தில் தினமும் பயணிப்பவர்கள் ரூ.185 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 3 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் பெற விண்ணப்பத்துடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.