ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை,
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடி அடுத்துள்ள காட்டு வேப்பிலைப்பட்டி சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சா லையோரத்தில் உள்ள காட்டிற்குள் பஞ்சுமாயி அம்மன் கோயில் உள்ளது .
இக்கோயில் கூரை விட்டத்தில் வாலிபர் ஒரு வர் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நபரை மீட்டனர், பின்னர் அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசென்சை கைப்பற் றினர் . அதனை வைத்து விசாரித்த போது தூக்கில் சடலமாக தொங்கியவர் , சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள உத்தண்டி வளவு பகுதியைச் சேர்ந்த மணிமுத்து ( 40 ) என்பது தெரிய வந்தது.
இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள வீட்டு உப யோக பொருட்கள் விற்பனை கடையில் டிரைவராக பணி யாற்றி வந்த மணிமுத்து , ஓய்வு நேரத்தில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட்டை விளையாடி வந்துள்ளார். அதற்கு அடிமையானதில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார் . இதுகு றித்து அறிந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மணிமுத்துவை கண்டித்துள்ளனர் .
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிமுத்து தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டிலிருந்து வெளியேறிய அவர் சேசன்சாவடி காட்டுப் பகுதிக்குள் நுழைந்து கோயில் விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது . இதையடுத்து , மணிமுத்துவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.