BREAKING NEWS

ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் கைது!

ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசா மாநிலம்,
புவனேஷ்வரில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் விரைவு ரயிலில் D2 கோச்சில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாத்ரூம் அருகே 3 பைகளில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்ரதர் ​​செட்டி என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )