ராஜபாளையம் நகராட்சி குடிநீர் வாழ்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரி ஆர்ப்பாட்டம்.!!
ராஜபாளையம் நகராட்சி முடங்கியார் சாலையில் பெரிய பாலம் அருகே குடிநீர் வால்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கவனப்படுத்தியும் சரி செய்யப்படவில்லை.
மேலும் 9, 10,11,12 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை தாமிரபரணி திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீர் செய்யப்படாமல் உள்ளது.
அவற்றை சரி செய்ய வேண்டியும் வாரத்திற்கு ஒரு முறை கொசு மருந்து அடிக்க வலியுறுத்தியும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சம்பந்தபுரம் மற்றும் சீதக்காதி தெரு ஆகிய கிளைகளின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
CATEGORIES விருதுநகர்