ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டுதிருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளடங்கிய வடமேற்கு மண்டலங்களான 7 மாவ ட்டங்களில் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக 882 தீயணைப்பு வீரர்கள் தயார். மண்டல ஐ ஜி தகவல்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற24 கொண்டாடப்படுகிறது இத்திருநாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவரும் புத்தாடைகளை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்து வழக்கம்.
இந்த நேரங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வு தீயணைப்புத் துறையினர் ஆங்காங்கே செயல்முறை மூலம் விளக்கி வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று எவ்வாறு மீட்பு பணிகளை கையாள்வது காயம் ஏற்பட்டால் உடனடியாகமருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது.
முதலுதவி அளிப்பது போன்ற வழிமுறைகளை மேற்கொள்ளதீயணைப்புத் துறையினருக்கு துறை மண்டல இயக்குனர் சரவணகுமார் உத்தரவிட்டுள்ளார்.
வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் 51 தீயணைப்பு நிலையங்கள்உள்ளன.இந்த மாவட்டங்களில்24 மணி நேரமும்882 தீயணைப்பு வீரர்கள்தயார் நிலையில் உள்ளனர்.
இவர்கள்வருகிற 23 முதல்25 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகள் இதுவரை 220நிகழ்ச்சிகள் 142 பள்ளி கல்லூரிகளில்நடந்துள்ளன.
மேற்குறிப்பிட்ட ஏழு மாவட்டங்களில் தற்காலிகமாகவும் பட்டாசு விற்பனை செய்ய630 பேர்விண்ணப்பித்தனர். இதில் 60 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு570 இடங்களில் பட்டாசு கடை விற்பனை செய்ய தீயணைப்பு துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லாம், மருத்துவமனை போன்ற இடங்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. அரசு நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும்.
குழந்தைகள் எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். கால்களில் செருப்பு அணிந்து இருக்க வேண்டும். குழந்தைகளைதனியாக பட்டாசுகளை வெடிக்க விடக்கூடாது. பட்டாசுகள் வெடித்த பின் சோப்பினால் கைகளை கழுவ வேண்டும். கருத்தைக் கொண்டு பட்டாசுகளை கைகளில் பிடிக்க கூடாது. போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் தீயணைப்புத் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.