ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்,காமராஜர் பிறந்த நாள் விழா க்ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் கொண்டாடப்பட்டது.

கமுதியில், க்ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,நாடார் பஜாரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு உறவின் முறை அம்பலகாரர் சக்திவேல், நாளது மாத முறைகாரர் பொன்னுச்சாமி, மற்றும் டிரஸ்டிகள், பள்ளி மற்றும் பல்வேறு நிர்வாககுழுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் க்ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப்பள்ளிகளில் கொடியேற்றப்பட்டு,அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.பின்னர் காமராஜர் திருவுருவ படத்தை அலங்கார வண்டிகளில் வைத்து, டிரம்செட் முழங்க நகர்வலம் வந்தது. ஊர்வலத்தின் முன்பு மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது.
