ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் N.K.S.பரக்கத்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் SDPI கட்சி விரிவாக்க துறை மாநில ஒருங்கிணைப்பாளர் S.செய்யது இப்ராகிம், SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் J நூருல் அமீன் , WIM அமைப்பின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A.கன்சுல் மஹரிபா மற்றும் முதுகுளத்தூர் திடல் பள்ளி வாசல் இமாம் சிராஜ் ஆலிம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொருளாளர் V.KA.ஹமீது சுல்தான் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஷீத் கான் , முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முஹம்மது ஆரிப் , மற்றும் பரமக்குடி சட்ட மன்ற தொகுதி தலைவர் மஹாதீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட தொண்டரணி தலைவர் J.பாஞ்சுபீர் அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அபிராமம் நகர் தலைவர் நவாப் இப்ராகிம் அவர்கள் எழுச்சி முழக்கங்கள் எழுப்பினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.ராஜா முஹம்மது அவர்கள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
