ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பிரபுக்களுர் குரூப் முத்துவிஜயபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை வைத்தார். தனித்துறை ஆட்சியர் கந்தசாமி, முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் , மண்டல துணை தாசில்தார்கள் மீனாட்சி சுந்தரம் ,சசிகலா முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் 4 லட்சம் மதிப்பீட்டில் 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார். உடன் துணி வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா ,பிரபுக்களூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா நீதிராஜன், ஆதனகுறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திக்ராஜா, ஆர் ஐ பெரியசாமி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்