ராமநாதபுரம் முதுகுளத்தூர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு வார கால பயிற்சி.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு வார கால பயிற்சி முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.இப்பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பேராசிரியர் சண்முகவேல் தலைமை வகித்தார்.உதவி வட்டார கல்வி அலுவலர்கள்
வேல்முருகன், இந்திராகாந்தி, அவர்கள் மேற்பார்வையில் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.எண்ணும் ,எழுத்தும் திட்டத்தை ஆசிரியருக்கு எளிதில் புரியும் வகையில் ஓவியமாக வரைந்து பயிற்சி அறைகளில் காட்சிப்படுத்தினர். ஆசிரியர்கள் ஜெய்னப்ஹாஜரா, ஜமினாபானு, குமார், சிலம்பரசன், உஷா,ஜமினாபானு,ரலினா மர்ஜான், ரமிலாபானு,சுனைனா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
