ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.
ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கிளர்ச்சி செய்ய வேண்டும் – தி.க தலைவர் வீரமணி பேட்டி.
தந்தை பெரியாரின் 49 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவருடைய உருவச்சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரமணி, தற்போதைய திமுக அரசு பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது. குறிப்பாக பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தை நிறைவேற்றி பெரியாரின் நெஞ்சில் தைத்த முல்லை அகற்றியது இந்த அரசு. அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் நிறைவேற்றி வருகிறது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முயற்சி செய்தார் அதற்கு அனுமதியும் பெற்று பணிகள் தொடங்கின அப்பொழுது சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா போன்றோர் அந்த இடத்தில் ராமர் கட்டிய பாலம் உள்ளது எனக் கூறி அந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர்.
அதனால் அது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று பா.ஜ.க வை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஒருவர் சேது சமுத்திர திட்டப் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார்.