BREAKING NEWS

ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை!!

ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை!!

hanging suicide

சென்னையில்  திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியில் வசித்து வருபவர் 45 வயதான  ரமேஷ் . இவர்   ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி  40 வயது லதா. இவர்களுக்கு 17 வயதில் பிரசன்னா என்ற மகனும், 15 வயதில்  மதுமிதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ், 2வதாக பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இவர் நெடு நாட்களாக  பிரியதர்ஷினி வீட்டில், தான் வசித்து வருகிறார். நேற்று ரமேஷ் தனது அறைக்கு சென்று வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிரியதர்ஷினி கதவை தட்டிப் பார்த்தார். எந்த சத்தமும் இல்லை. கதவையும் திறக்கவில்லை. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில்  ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தவிர வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் திருவேற்காடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகம் முழுவதும் தொழிலதிபர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )