BREAKING NEWS

ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட இபி காலனி மேல்புறம் அதிகமாக குடியிருப்பு இருப்பதாகவும் அவ் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முயற்சியால் புதிதாக பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்தனர்.

 

 

இன்று புதிதாக பள்ளிக்கூடம் கட்ட ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

 

 

இதற்கு முன்னதாக கோவில்பட்டி அருகே கோவிந்தம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி , அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், வீரபாண்டிபுரம் ஒன்றிய கவுன்சிலர் கோபி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS