BREAKING NEWS

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

குத்தாலம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்தை கல்லூரி நிர்வாகத்திடம் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒப்படைத்தார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் கிராமத்தில் இன்று ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டிடத்தை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

 

இதன் அருகே தற்காலிகமாக குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. போதுமான வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்கள் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் தற்காலிக ஏற்பாடாக தற்போது ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட இரண்டு அறைகள் கொண்ட சமுதாய புதிய கட்டிடத்தை மாணவர்களின் நலன் கருதி கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

 

இக்கல்லூரி இங்கு இயங்கும் வரை தற்போது திறக்கப்பட்ட சமுதாயக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஏற்கனவே பழைய சமுதாயக் கூடத்தில் தான் தற்காலிக கல்லூரி இயங்கி வரும் நிலையில் தற்போது புதிய சமுதாய கட்டிடத்தையும் கல்லூரிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் மாணவர்களின் நலன் கருதி கல்லூரிக்கு நிரந்தர இடம் தேர்வு செய்து கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இவ்விழாவில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கோட்டாச்சியர் யுரேகா, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS