BREAKING NEWS

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 16ஆம் கல்வி ஆண்டு துவக்க விழா.!

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 16ஆம் கல்வி ஆண்டு துவக்க விழா.!

 

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே மீனாட்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பதினாறாம் ஆண்டு கல்வி ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

 

இதில் மாணவ- மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சி உடன் கொண்டாடினர். குறிப்பாக ஆசிரியர் பணி என்பது மகத்தான பணி என்றும் மாணவிகள் பரதநாட்டியம் மூலமாக வருங்கால குழந்தை செல்வங்களுக்கு கலை நிகழ்ச்சியுடன் பாடம் கற்பித்தல் அதேபோல் கல்வி கற்கும் பள்ளி குழந்தைகளிடம் கலை நிகழ்ச்சி மூலமாக பாடம் கற்பித்தல் போன்ற நிகழ்ச்சி செய்து காட்டினர்.

 

இவ்விழாவில் மீனாட்சி அறக்கட்டளை செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார், அற்புதம் முன்னிலை வகித்தார், கல்லூரியின் முதல்வர் மில்டன் குத்துவிளக்கேற்றி வரவேற்புரையாற்றினார்.

 

மேலும் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )