ரேஷன் கடைகளில் கூடுதலாக சர்க்கரை! அமைச்சர் அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் கூடுதலாக சர்க்கரை! அமைச்சர் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் ஆய்வுப்பணி நடைபெற்றது. அப்போது, காணை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம், காணைகுப்பத்தில் திறந்தவெளி நெல்சேகரிப்பு மையம், பெரும்பாக்கத்தில் நியாயவிலைக் கடை ஆகியவற்றை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் உடன் இருந்தனர்.

அதனைத் தொடரந்து அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது, தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரேஷன் கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. விரைவில் தமிழகம் முழுவதும் கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை கொண்டு வரப்படும். மேலும், 500 டன் அரைக்கும் அரிசி ஆலை 6-ம், 800 டன் அரைக்கும் ஆலை 3-ம், 200 டன் அரைக்கும் ஒரு தனியார் ஆலையும் நிறுவப்படும். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காலி இடங்களில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
