வடக்கு வீதி காமராஜ் மார்க்கெட்டை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தஞ்சாவூர் வடக்குவாசல் அருகேயுள்ள பழைய காமராஜ் மார்க்கெட் ரூ 17.50 கோடி செலவில் 304 கடைகளுடன் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி,,மண்டல தலைவர் எஸ்.சி. மேத்தா மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள்,அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேயர் சண். ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ரூ. 17.50 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பணி நடைபெற்றது. இங்கு 304 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு வியாபாரம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் தற்காலிகமாக கடை அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு இங்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்கெட்டில் 170 இருசக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 லாரிகள் நிறுத்தும் வசதி உள்ளது. மேலும் இந்த மார்க்கெட் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.
காமராஜர் மார்க்கெட்டில் சுகாதாரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் இந்த காமராஜர் மார்க்கெட்டை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைப்பார். என கூறினார்.
தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் எஸ்சி.மேத்தா, ,செயற்பொறியாளர் ஜெகதீசன், இளநிலை பொறியாளர்கள் ரமேஷ்,கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.