BREAKING NEWS

வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிறிய வழி சிமெண்ட் பூசி மூடல்: வயது முதிர்ந்த நபர்கள் நடக்க முடியாமல் திணறல்!

வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிறிய வழி சிமெண்ட் பூசி மூடல்: வயது முதிர்ந்த நபர்கள் நடக்க முடியாமல் திணறல்!

வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் வேலப்பாடி அருகில் அமைந்துள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பக்கத்து கட்டடத்தில் இயங்கும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்வதற்கு வசதியாக ஒரு சிறிய வழி இரும்பு கேட் போட்டு அமைக்கப்பட்டு இருந்தது. இதனை இதற்கு முன்பு இருந்த வட்டாட்சியர், தற்போது கே. வி. குப்பம் வட்டாட்சியராக இருக்கும் முரளிதரன் என்பவர் பூட்டு போட்டு பூட்டினார்.

 

இந்நிலையில் தற்போது வட்டாட்சியராக வந்துள்ள இல.வடிவேலு நிரந்தரமாக அந்த சிறிய கேட்டை கூட அகற்றாமல் ஒருபுறம் மட்டும் சிமெண்ட் பூசி வழியை நிரந்தரமாக தடை செய்து வைத்துள்ளார். இதனால் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இந்த இரண்டு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது ஆதங்கத்தையும், புகார்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களுக்கு வசதி செய்து தர வேண்டிய அரசு அதிகாரிகள் இப்படி ஈகோ காரணமாக வழியை அடைப்பது அநாகரீகமான செயல், அத்துடன் அத்துமீறிய உச்சகட்ட அராஜக செயல் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதலால் பொதுமக்கள் நலன் கருதி இந்த சிறிய வழியை உடனடியாக நிரந்தரமாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஆதலால் இந்த வழியை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக திறந்து விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த வழியினால் எவ்வித இடையூறும் எந்த அலுவலகத்துக்கும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS