BREAKING NEWS

வணிகத்துக்கான சொத்துவரி 100 சதவீதத்தை பேரூராட்சி நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும். சோழபுரம் வியாபாரி நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.

வணிகத்துக்கான சொத்துவரி 100 சதவீதத்தை பேரூராட்சி நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும். சோழபுரம் வியாபாரி நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.

திருப்பனந்தாள் அருகே சோழபுரம் வியாபாரி நல சங்கத்தின் சார்பில் 15 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் மாலிக் தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் ரமேஷ், பாரூக், துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தடை செய்யப்பட்ட பாலீத்தின் மற்றும் புகையிலைப் பொருட்களை வணிகர்கள் விற்பனையை தடை செய்து தமிழக அரசுக்கு ஒத்துழைப்பது,கடைவீதியில் இருபுறமும் மழைநீர் வடிகால் விரைவாக அமைத்திட சோழபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது,

 

ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறையை கேட்டுக் கொள்வது, கடைவீதியில் காவலர்கள் ரோந்து சென்று வரவும்,புற காவல் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த காவல்துறை கேட்டுக் கொள்வது,

 

தமிழக அரசு அறிவித்துள்ள வணிகத்துக்கான சொத்துவரி 100 சதவீதத்தை பேரூராட்சி நிர்வாகம் மறு பரீசிலனை செய்ய வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சோழபுரம் வியாபாரி நல சங்கத்தின் பொருளாளர் சலீம் நன்றி கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )