வண்டலூர் விஐடி கல்லூரி பிடெக் மூன்றாமாண்டு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
![வண்டலூர் விஐடி கல்லூரி பிடெக் மூன்றாமாண்டு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை. வண்டலூர் விஐடி கல்லூரி பிடெக் மூன்றாமாண்டு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-27-at-2.14.37-PM-e1669538862669.jpeg)
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம்சாலை
மேலகோட்டையூர் பகுதியில் இயங்கி வரும் வி.ஐ.டி தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பிடெக் பட்டப்படிப்பு பயின்று வந்த மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கிரிஷ் ராமன் புட்டாலா என்பவரது மகன் புட்டாலா ஓம் கிரிஷ் (19) என்ற கல்லூரி மாணவன் நேற்று கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி புட்டாலா ஓம் கிரிஷ் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாழம்பூர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் சக மாணவர்கள் மற்றும் நெருக்கமான மாணவர்களிடம் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குடும்ப பிரச்சினையா, சக மாணவர்களோடு பிரச்சினையா,
அல்லது காதல் விவகாரமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.