வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.
செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12-ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில், தலைவர் பரமேஷ்வரி முருகன் தலைமையில் இன்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தலைவர், துணைத்தலைவர் உட்பட 9 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் நடைபெறும் பணிகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்காமல், டீ, வடை சாப்பிட்டு விட்டு, 10-நிமிடத்தில் கூட்டம் முடிந்தது என கலைந்து சென்றனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், 11.40 மணிக்கு கூட்டம் முடிந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொதுமக்களின் அடிப்படை தேவைகள், எதிர் வரும் கோடைகால குடிநீர் குறித்த விவாதம் என, நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விளக்காமல் 10-நிமிடத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு கலைந்து சென்றது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில், ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படை பணிகள் குறித்து விவாதிக்காமல், கவுன்சிலர்கள் கலந்து கொண்டு டீ, வடை மற்றும் மாதாந்திர பயணப்படி மற்றும் அமர்வுபடி (போக்குவரத்து செலவு தொகை) மட்டும் வாங்கி கொண்டு செல்வது, மக்கள் பிரதிநிதிகளான ஒன்றிய கவுன்சிலர் அமைதியாக செல்வது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.