வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் புதிய சமையலறை திறப்பு விழா.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
நிலக்கோட்டை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விராலி மாயன்பட்டி ஊராட்சி, கோணியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதிய சமையலறை கட்டிட திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பரமேஸ்வரி முருகன தலைமை வகித்து திறந்து வைத்தார்மாவட்ட கவுன்சிலர் கனிக் குமார், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி,
ஒன்றிய குழு துணை தலைவர் முத்து,,ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியைராஜலட்சுமி வரவேற்றார்.
பள்ளி சத்துணவு அமைப்பாளர் செல்வம், திமுகஊராட்சி செயலாளர்கள் கருணாநிதி, தேவராஜன், திமுக நிர்வாகிகள் பஞ்சவர்ணம், பாலகிருஷ்ணன்,
சஞ்சீவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.