BREAKING NEWS

வத்தலக்குண்டு-சித்தரேவு வழியே செல்லும் அரசுப்பேருந்தால் பொதுமக்கள்,பயணிகள் அவதி

வத்தலக்குண்டு-சித்தரேவு வழியே செல்லும் அரசுப்பேருந்தால் பொதுமக்கள்,பயணிகள் அவதி.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட வத்தலகுண்டில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சித்தரேவு, பெரும்பாறை, பன்றிமலை வழியாக செல்லும் அரசுப் பேருந்து மீனாட்சி ஊத்து அருகில் ஏணிக்கள் என்ற இடத்தில் இப்பேருந்து பழுதடைந்து நிற்கிறது. இப்பேருந்தில் செல்லும் பயனிகள் அலுவலக பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள்,மருத்துவமனைக்கும் செல்லும் நோயாளிகள், வயோதியர்கள் அலுவலகபபணிக்கும்,மராத்துவமணைக்கும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். தொடர்ந்து இதுபோன்று வத்தலக்குண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் டிப்போவில் இருந்து இயக்கும் பேருந்துகள் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.மேலும் இதுபோல் சம்பவம் தொடர்ந்து நடக்காமல் இருக்க மாவட்ட அரசுப்போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து பயணிகளுக்கு இடையூறின்றி அவரவர் பணிகளுக்குச் செல்ல சிறந்தபேருந்தை அவ்வழியே இயக்க பரிந்துரை செய்ய வேண்டுமென போக்குவரத்து துறைக்கு பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )