வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை .. போலீசார் விசாரணை !

அரியலூர் மாவட்டம் பெரியவளையத்தில் இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சனிக்கிழமையன்று மலர்விழி என்பவரும் கண்ணகி என்பவரும் வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில் , வயல்பகுதியில் குடும்பத்தினர் அவர்களை தேடிச்சென்றனர்.
அங்கு இரு பெண்களும் , உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்ததை அவர்கள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது . அவர்கள் அணிந்திருந்த நகைகள் மாயமாகிருந்த நிலையில்,
நகைக்காக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES அரியலூர்