வரும் வாரத்துல 4 நாட்கள் வங்கி விடுமுறை! நாடு முழுவதும் ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்!
வரும் வாரத்துல 4 நாட்கள் வங்கி விடுமுறை! நாடு முழுவதும் ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்!
மக்களே… உங்களோட பணத் தேவைகளை சரியா திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வரும் வாரத்துல நான்கு நாட்கள் வங்கி விடுமுறை நாடு முழுவதும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமிருக்கு. இந்த மாதம் மே 30 மற்றும் 31ம் தேதி தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதே போல், மே 28 மற்றும் 29ம் தேதி, மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாகும். அதற்கடுத்து, 30 மற்றும் 31ம் தேதி ஸ்ட்டிரைக் என்பதால், தொடர்ந்து 4 தினங்களுக்கு வங்கி விடுமுறையால் வங்கி சேவைகள் நாடு முழுவடும் முடங்கும் அபாயம் உள்ளது.
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தை நினைத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்றக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30 மற்றும் 31 ஆகிய 2நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னரே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக கத்தோலிக் சிரியன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பெடரல் பேங்க், யுசிஓ பேங்க் உள்ளிட்ட வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கவனத்தில் கொள்ள வேண்டியது.சில காலமாகவே வங்கிகளுக்கு வெளியூர்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு தற்காலிகமாக அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. இதனால் வங்கிகளின் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு புதிய வேலை வாய்ப்புகளும் குறைந்து போகிறது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கார் கூறும்போது, ‘‘கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே வங்கிகளில் இதுபோன்ற ஆட்கள் வேலையில் நியமிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்துவிடுகிறது. எனவே வங்கி ஊழியர்கள் இதனை தங்களது முக்கிய கோரிக்கை¬யாக முன் வைத்துள்ளனர்’’ என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘சில வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கூட்டமைப்பின் குரல் தொடர்ந்து நசுக்கப்புடுவதாகவும், தாக்கப்படுவதாகவும் சில நேரங்களில புகார் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் பெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் நிலவி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. யுசிஓ வங்கி ஊழியர்களும், வங்கிகளுக்கு வெளியூர்களில் இருந்து வரும் ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் பலருக்கு சம்பள தேதி என்பதால் அவர்களின் பணப் பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு நிலவும் என்பது பெரிய பேசுப் பொருளாக உள்ளது. இதற்கு முன் தினங்கள் சனி, ஞாயிறு என்பதால், வரும் வாரத்தில் தொடர்ந்து 4 தினங்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.