வலையனேந்தல் கிராம ஸ்ரீ கருமேனி அம்மன் கோவிலில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் வழிபாடு.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீகருமேணி அம்மன் கோயிலின் பாரம்பரிய ஆணி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து நேத்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து 500க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி நேர்த்திக் கடனை நிறைவேற்ற நிலையில் இன்று பக்தர்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்தும் அக்கினிச்சட்டி, ஆயிரம் கண் பானை போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
CATEGORIES Uncategorized
