வல்லம் பேரூராட்சியில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தல்,அதிமுக கவுன்சிலர் புகார், திமுக கவுன்சிலர் மறுப்பு.

தஞ்சையை அடுத்த வல்லத்தில் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் உள்ளது இதில் 15 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரத்தை திமுக கவுன்சிலர் அன்பழகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனுமதி இன்றி மரத்தை வெட்டி கடத்திச் சென்று அதில் பாதி மீட்கப்பட்டுள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் முருகானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சியில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் அன்பழகன் தனது வார்டு இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இடம் சுத்தப்படுத்தப்பட்டது, என் மீது தவறு ஏதும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் வெட்டப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர், யூகலிப்டஸ் மரங்கள் 17 எண்ணிக்கையில் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது,
மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் மனு அளித்துள்ளார், போலீசார் விசாரணையில் மரம் வெட்டி கடத்தப்பட்டது உண்மைதானா என்ற தகவல் விரைவில் வெளிவரும்