வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை
வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை
சங்ககிரி பேரூராட்சி பால்வாய் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பின் அருகே சுமார் 80 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் இன்றிக் கிணறு ஒன்று உள்ளது. மேலும் இரவில் வெளிச்சம் தரும் வகையில் தெருவிளக்கும் அங்கே இல்லை! இதனால் கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு சிறுவன் ஒருவன் தவறி விழுந்து, இறந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே சிறுவர்களைப் பாதுகாக்க இந்த வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.