BREAKING NEWS

வாகன ஓட்டிகளுக்கு ஹைபை கொடுத்த அதிசய கரடி வைரலாகும் வீடியோ.

வாகன ஓட்டிகளுக்கு ஹைபை கொடுத்த அதிசய கரடி வைரலாகும் வீடியோ.

உலகம் முழுவதும் காடுகள் அடர்ந்த பகுதிகளில் விலங்குகளில் நடமாட்டமும் அதிகம் இருக்கும். அந்த பகுதிகளில் மனிதர்கள் நடமாடவும், வாகனங்களில் பயணிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் விலங்குகளில் நேரங்களில் மனிதர்கள் குறுகிட்டு அதை தொந்தரவு செய்ய தொடங்குகிறார்கள். அப்படியான சில வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

வனவிலங்குகள் அதிகளவில் நடமாடிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மனிதர்கள் செல்வதற்கும், கார் போன்ற வாகனங்களில் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் மனிதர்களால் விலங்குகளுக்கோ, விலங்குகளால் மனிதர்களுக்கோ எந்த அசம்பாவிதமும் நடந்து விடாமல் தடுப்பதற்காகவே இந்த தடைகள் பெரும்பாலும் பிறப்பிக்கப்படுகின்றன.

அதையும் மீறி சில நெகிழ்ச்சியான, அன்பை வெளிப்படுத்தக் கூடிய சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. அதுபோன்றதொரு வீடியோதான் தற்போது சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். மேலும் பலருக்கு இதனை பகிர்ந்தும் மகிழ்ந்து வருகிறார்கள்.

அந்த கியூட் வீடியோவில், சுற்றுலா பயணிகள் காரில் சென்று கொண்டிருந்த வழியில் திடீரென்று ஒரு கரடிக் கூட்டம் நுழைந்து விடுகிறது. அதில் இருந்த ஒரு கரடி மட்டும் காரை ஓட்டிக் கொண்டிருப்பவரின் அருகில் சென்று ஆசையாக ஹைபை செய்கிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் வாகன ஓட்டியும் ஹைபை செய்கிறார். பின்னர் கரடி அங்கிருந்து சென்றுவிடுகிறது. இந்த அழகான காட்சியை எதிரில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரில் இருந்த நபர் வீடியோ எடுப்பது போல காட்சிகள் பதிவாகி உள்ளன.வனவிலங்குகள் மனிதர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ றிuதீவீtஹ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )